திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் திமுக – தேமுதிக இடையிலான கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிய வந்துள்ளது. தேமுதிக தொடங்கியதில் இருந்து இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைத்ததே கிடையாது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்வி எழுந்தது.த ற்போது தேமுதிகவின் “இல்லம் தேடி உள்ளம் நாடி” சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் பிரேமலதா விஜயகாந்த் ஜனவரி 2-வது வாரத்திலேயே தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று கூறியவர் திடீரென பின் வாங்கினார்.
இதனிடையே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று தேமுதிக கோரி இருந்த நிலையில் திமுக 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக தேமுதிக உறுதி அளித்தள்ளதாக தெரிய வருகிறது.
ஆனால் அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் டிமாண்ட் வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. திமுக 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு உத்தரவாதம் மட்டுமே அளிப்போம் என்று தெரிவித்திருந்தார். இதனால் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதேபோல் விஜயபிரபாகரனுக்கு விருதுநகர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் திமுகவிடம் கோரினார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையசைக்க, பிப்ரவரி முதல் வாரத்தில் திமுக – தேமுதிக கூட்டணி அறிவிப்பை வெளியிட இரு தரப்பும் முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாகவே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்திருக்கிறார்.
விஜயகாந்தின் தாய் பெயர் ஆண்டாள். 2011-ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியை தேமுதிக உறுதி செய்த போதும், ஆண்டாள் கோயிலில் தரிசனம் மேற்கொண்டிருந்தார். 2016-ஆம் ஆண்டு திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்றெல்லாம் நம்பிக்கையுடன் இருந்தார்.
2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஒருபுறம் பாரதிய ஜனதா, இன்னொரு புறம் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் நலக்கூட்டணி. யார் பக்கம் விஜயகாந்த் போவார் என்கிற யூகம் தொடர்ந்து மூன்று மாத காலமாக கயிரு இழுக்கும்போட்டி நடந்தது போல் இது நடந்தது. மக்கள் பக்கம்தான் இருப்பார் கேப்டன் விஜயகாந்த் என்கிற அடிப்படையிலேயே இதை யாரும் எதிர்பார்த்திராத ஒரு திருப்புமுனை.
இந்நிலையில், காஞ்சிபுரம் அரசியல் மாநாட்டில், என் தொண்டர்கள் என்னை கிங் மேக்கராக பார்க்கவிரும்பவில்லை. கிங்காங்க பார்க்க விரும்புகிறார்கள். நான்தான் தமிழகத்தின் முதல்வராவேன் என்பதை விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியை உறுதிப்படுத்தி பழம் நழுவி பாலில் விழப் போகிறது என்ற கருணாநிதி நம்பிக்கையுடன் அவுட் ஆக்கி திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக பழம் நழுவி பாலில் விழுந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.