தமிழ் கடவுள் முருகரை வைத்து பிளவுவாத அரசியலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த பாஜக முயன்றபோதும் உங்களிடம் இருந்து ஒரு கண்டனமும் வரவில்லை. கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லையா அல்லது “என் முதலாளியை எப்படி நான் கண்டிப்பது” என்று நினைத்தீரோ!? என வைஷ்ணவி கடுமையாக விமர்சனம் செய்தார்.
தாத்தா அதிமுக, அம்மா திமுக என அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த சோசியல் மீடியாக்களில் பிரபலமாக வலம் வந்த கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இன்ஸ்டா புகழ் வைஷ்ணவி தவெகவில் அக்கா என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தவெகவில் இருந்து விலகி தன்னை செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதுகுறித்து வைஷ்ணவி தனது எக்ஸ் பக்கத்தில், பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களே! நீங்கள் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தந்தை பெரியாரை முருகர் மாநாட்டில் ஒன்றிய பாஜக அரசு விமர்சித்த போது எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை.
அதேபோல், ஒன்றிய பாஜக அரசு தமிழ் கடவுள் முருகரை வைத்து பிளவுவாத அரசியலை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயன்றபோதும் உங்களிடம் இருந்து ஒரு கண்டனமும் வரவில்லை. கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லையா அல்லது “என் முதலாளியை எப்படி நான் கண்டிப்பது” என்று நினைத்தீரோ!? மாற்றம் மாற்றம் என்று முழங்கிக் கொண்டிருக்கும் நீங்கள், இப்போ ‘ஏமாற்றம்’என்ற பெயரை பெற்றுவிட்டீர்கள். மக்கள் எல்லோரும் உங்கள் முகமூடியைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என வைஷ்ணவி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.