ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த அக்டோபரில் நடைபெற்ற U-19 போட்டியில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் விளாசி 117 ரன்கள் விளாசி தலைப்புச் செய்தியில் இடம்பெற்ற ஹர்வன்ஷ் சிங் பங்கலியா இன்று இங்கிலாந்து யங் லயன்ஸ் அணிக்கு எதிரான 50 ஓவர் பயிற்சி போட்டியில் 52 பந்துகளில் 103 ரன்களைசவுராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்வன்ஷ் சிங் இந்தியா U -19 வீரர், அடுத்த ரிஷப் பண்ட் என்று பேசப்பட்டு வருகிறார்.
இந்திய U-19 அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி ஜூன் 27 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் செவ்வாயன்று, லௌபரோவில் நடந்த 50 ஓவர் பயிற்சி போட்டி விளையாடியது. ஆயுஷ் மத்ரே 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார், சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பரபரப்பை ஏற்படுத்திய 14 வயது வைபவ் சூர்யவன்ஷி 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து மைதானத்தில் இந்த ஐபிஎல் நட்சத்திரங்கள் சொதப்பிய நிலையில், அதே போட்டியில்,
டாஸ் வென்ற இங்கிலாந்து யங் லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய 2025 IPL நட்சத்திரங்கள் கேட்டன் ஆயுஷ் மத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஆயுஷ் மத்ரே 1 ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, ஐந்தாவது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிக்க இருவரும் சேர்ந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர். மேலும் இந்திய U-19 அணி 13-வது ஓவரில் 91 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் கனிஷ்க் சௌஹான் 79 ரன்களும் மற்றும் ராகுல் குமார் 73 ரன்களும் எடுத்து 112 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து இந்திய U-19 அணி சரிவில் இருந்து மீட்டனர்.
மேலும் 36-வது ஓவரில் 251 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த நிலையில் ஆர்.எஸ். அம்ப்ரிஷுடன் இணைந்த ஹர்வன்ஷ் சிங் பங்கலியா இருவரும் இணைந்து இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியின் பந்துவீச்சை பந்தாடினர். 47 பந்துகளை சந்தித்த ஆர்.எஸ். அம்ப்ரிஷ் 72 ரன்கள் எடுத்து வெளியேறியபோது ஹர்வன்ஷ் சிங் பங்கலியா 33 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க இந்த ஜோடி 126 ரன்கள் சேர்த்தது, அடுத்த பந்தில் ஒரு பவுண்டரியுடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இன்னிங்ஸின் 48-வது ஓவரை மேனி லம்ஸ்டனின் பந்து வீச்சில் ஹர்வன்ஷ் சிங் பங்கலியா தொடர்ச்சியாக சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
இதனால் இந்திய அணியின் ரன்கள் திடீரென மேலும் உயர தொடங்கியது. மேலும் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் விளாசி 52 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.மேலும் 34 பந்துகளில் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில் இரண்டாவது அரைசதம் 18 பந்துகளில் அடித்து பூர்த்தி செய்ய 52 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என 103 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இந்திய U-19 அணி 442/9 என்ற கணக்கில் இன்னிங்ஸை முடித்தது.
குஜராத்தின் சிறிய ஊரான காந்திதாமைச் சேர்ந்தவர்தான் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா. இவரது தந்தை தமந்தீப் சிங், மாமா கன்வராஜீத் சிங் இருவரும் டவுனில் கிரிக்கெட் ஆடுபவர்கள். இருவருமே விக்கெட் கீப்பர்கள். இப்போது ஹர்வன்ஷ் சிங் குடும்பம் கனடாவில் செட்டில் ஆகியுள்ளனர். ஹர்வன்ஷ் சிங் மட்டும் தாயாருடன் காந்திதாமில் இருக்கிறார். சவுராஷ்டிரா அணிக்கு ஆடுகிறார்.
யுவராஜ் சிங் T -20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராடை ஒரே ஓவரில் அடித்த அந்த 6 சிக்சர்களைப் பார்த்தது முதல் ஹர்வன்ஷ் சிங் பங்காலியா தானும் ஒருநாள் இந்தியாவுக்காக ஆடுவேன் என்று உத்வேகம் பெற்றதாக தந்தை தமந்தீப் சிங் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார்.
யுவராஜ் சிங்கைப் பார்த்து இடது கை பேட்டர் ஆன ஹர்வன்ஷ் சிங் பங்காலியா 6 வயதில் சவுராஷ்ட்ரா கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்துள்ளார். மேலும் ஹர்வன்ஷ் சிங் பங்காலியா, யுவராஜ் சிங்கின் மிகப்பெரிய விசிறியாவார்.இப்போது இவரை அடுத்த “ரிஷப் பந்த்” ரெடி என கிரிக்கெட் உலகம் பேசிகொண்டுள்ளது.