செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்த நிலையில் பாதுகாவலர்கள் மறுத்தால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் ஆவேசமாக மேடையில் இருந்து கீழே இறங்கிய சீமான், செய்தியாளர்களை தாக்குவது போல் வேகமாகப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்மையில் செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனஸ்கோ நிறுவனம். ஆனால் அந்த அறிவிப்பில் செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் செஞ்சி கோட்டையை தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை என மராட்டிய மன்னருக்கு சொந்தமான கோட்டை இல்லை என்று தெரிவித்து வருகின்றனர். தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டியது செஞ்சி கோட்டை, வரலாற்று திரிபை தடுத்து நிறுத்தி, தமிழ் மன்னர் கோட்டையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்று நாதக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சில் சீமான் தலைமையேற்று பேசினார். இந்த அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்கள் அவருடன் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை பாதுகாவலர்கள் மறுத்துள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேடைக்கு கீழே சலசலப்பு ஏற்பட்ட நிலையில் ஆவேசமாக மேடையில் இருந்து கீழே இறங்கிய சீமான், அவர்களைத் தாக்குவது போல் வேகமாகப் பாய்ந்துகொண்டு வந்தார். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.