டெல்லி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் ஊழியர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. டெல்லி ஹஸ்ரத் நிசாமுத்தீன் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பாடு அந்த வாக்குவாதம் கைக்கலப்பில் ஈடுபடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் மோதல் முற்றி கையில் கிடைத்த குச்சிகள், டஸ்ட்பின்கள், பெல்டால் என அனைத்தையும் பயன்படுத்தி பயங்கரமாக அடித்துகொள்கின்றனர். ரயில் ஊழியர்கள் இப்படி அடித்துக்கொண்டதை பார்த்த பயணிகள் சிலர் அச்சத்துடன் அங்கிருந்து நகரும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

டெல்லி ரயில் நிலையத்தை பரபரப்பாக காட்சியளிக்கும் ரயில் நிலையத்தில் பயணிகள் கண்முன்னே நடந்த இந்த சம்பவம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் மாறி மாறி தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.