அன்று ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில் எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த்திற்கு கௌரவ வேடத்தில் “ஆற அமர கொஞ்சம் யோசித்து பாரு..” என்ற பாடலை பாடி ஓட்டு கேட்டேன். இன்று அன்று ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில் எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த்திற்கு கௌரவ வேடத்தில் “ஆற அமர கொஞ்சம் யோசித்து பாரு..” என்ற பாடலை பாடி ஓட்டு கேட்டேன் என மு.க. ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து வருகின்றது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், விருதுநகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கடற்கரை ராஜ், தங்கபாண்டியன், விஜய பிரபாகரன், அசோகன், மகாலிங்கம், ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, “விருதுநகர் சட்டசபை தொகுதி தேமுதிகவை சேர்ந்த விஜய பிரபாகரன், எனது ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த், எனது அன்புச் சகோதரி பிரேமலதா ஆகியோரின் மகன் தான் இங்கே வேட்பாளராக நிற்கிறேன். அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். விஜய பிரபாகரனுக்கு வாக்கு கேட்கும்போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.
எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த், ‘மக்கள் ஆணையிட்டால்’ என்ற படத்தில் வேட்பாளராக நடித்தார். அதில் கௌரவ வேடத்தில் நான் ஓட்டு கேட்க வருவேன். விஜயகாந்த்தை ஆதரித்து “ஆற அமர கொஞ்சம் யோசித்து பாரு..” என்ற பாடலை பாடுவேன். விஜயகாந்த்துக்கு ஓட்டு கேட்டு திரைப்படத்தில் நடித்தேன். இன்று அவரது அருமை மகனுக்கு வாக்கு கேட்டு நேரில் வந்துள்ளேன். விஜய பிரபாகரனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.