திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம், மணலி அரசு உயர்நிலைப்பள்ளி சாரணர் இயக்கம் சார்பாக நேற்று பனை நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் வீ. பொம்மி, பெற்றோர் ஆசிரியர் தலைவர் சிவக்குமார், செந்தில்நாதன் ஷாகுல் ஹமீது, கிராம நிர்வாக அலுவலர் வினோத், பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் உமாநாத் அப்துல் அஜீஸ், தலைமை ஆசிரியர் அண்ணாதுரை, உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பனையின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர் வழங்கப்பட்டது. இறுதியாக சாரண இயக்க ஆசிரியர் குழு பாரதி கண்ணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.