மட்டன் குழம்பில் வயாகரா கலந்து கணவனுக்கு தந்த மனைவி… ஆனால், மட்டன் குழம்பின் வாசனையை கண்டு சாப்பிடாததால் அடுத்து BP மாத்திரை, தூக்க மாத்திரைகளை பவுடர் செய்து, மதுபானத்தில் கலந்து கொடுத்து கணவன் மயங்கிய நிலையில் இருந்த போது தொங்கவிட்ட மனைவியின் செயல் தெலங்கானாவை அதிர வைத்துள்ளது.
இன்றைய எந்திர உலகில் மனிதன் பணத்தின் பின்னால் ஓட, உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிக்க குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன. இதற்கு காரணமாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் கொலையில் முடிகிறது. நாடெங்கும் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகளில் பலரும் செத்து மடிகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு போட்டி போட்டு கொண்டு போட்டுத் தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைக்கிறது.
அந்தவகையில், தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம், சத்பகிரி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கட்டி சுரேஷ். இவரது மனைவி பெயர் மவுனிகா. இவர்கள் 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்ட போது அஜய் என்ற இளைஞர் பழக்கமானார். இதற்கு பிறகு இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு தகாத உறவாக தொடர்ந்துள்ளது. இதனிடையே மவுனிகாவின் கணவர் சுரேஷ் அடிக்கடி துன்புறுத்தி பணம் கேட்கவும், இது மவுனிகாவுக்கு எரிச்சலை தந்தது. ஒருகட்டத்தில் கணவரை கொன்றுவிடவும் முடிவு செய்தார்.
இதற்காக தன்னுடைய உறவினரும் பாலியல் தொழிலாளியுமான ஸ்ரீஜாவிடம் உதவி கேட்க உடனே ஸ்ரீஜா இன்னொரு பாலியல் தொழிலாளியான சந்தியா என்பவர் மூலம் மருந்து கடை வைத்துள்ள சிவகிருஷ்ணா என்பவரை மவுனிகாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து அனைவரும் சேர்ந்து சுரேஷை கொலை செய்ய திட்டம் போட்டனர். இறுதியில், சந்தியா, தேவதாஸ் என்பவர் மூலம் 15 வயாகரா மாத்திரைகளை வாங்கி வந்து சில நாட்களுக்கு முன்பு மவுனிகாவிடம் தந்திருக்கிறார்.
உடனே மவுனிகாவும், வீட்டில் மட்டன் குழம்பு வைத்து, அதில் வயாகரா மாத்திரைகளை கலந்து சுரேஷூக்கு சாப்பாடு தந்து மட்டன் குழம்பி ஊற்றி தந்தள்ளார். ஆனால், மட்டன் குழம்பில் வித்தியாசமான வாசனை வரவும், மட்டன் குழம்பை சாப்பிடவில்லையாம். இது மவுனிகாவுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் அடுத்த கொலை முயற்சியில் மவுனிகா இறங்கினார்.. இதற்காக கடந்த மாதம் 17-ந் தேதி இரவு BP மாத்திரை, தூக்க மாத்திரைகளை பவுடர் செய்து, மதுபானத்தில் கலந்து சுரேஷூக்கு தந்துள்ளார்.
அந்த மதுவை குடித்த சுரேஷ் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டார். உடனே மவுனிகா தன்னுடைய புடவையால் சுரேஷை தூக்கு மாட்டி தொங்கவிட்ட இதில் சுரேஷ் துடிதுடித்து இறந்துவிட்டார். அதன்பின்னர் சுரேஷின் சடலத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு, அவரின் அம்மாவுக்கு போன் செய்து ஒப்பாரி வைத்துள்ளார். மேலும் தாங்கள் இருவரும் உல்லாச இருந்தபோது திடீரென மயங்கி விழுந்துவிட்டார் என்று சொல்லி அழுதுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுரேஷின் அம்மா, உடனடியாக சுரேஷை மீட்டு அருகிலிருந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால், சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இதையடுத்து கரீம்நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், மவுனிகாவின் கள்ளக்காதல் அம்பலமானது. கிடுக்கிப்பிடி விசாரணையின் முடிவில் மவுனிகா, கள்ளக்காதலன் அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் ஆகிய 6 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.