திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குறும்பல் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை எனக் கூறி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி திருவாரூர் திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் மணலி கடைவீதியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கச்சலாபுரம் ராஜன் வாய்க்காலில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்ற ஒரு நிலையில் இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. உடனடியாக அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறும்பல் ரயிலடி தெரு பகுதியில் பகுதி நேர அங்காடி மற்றும் அந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் உடனடியாக கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுதும் உடனடியாக குடிநீர் பிரச்சினையை பூர்த்தி செய்து தர வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இதனால் பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தில் காரணமாக திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.