தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கொண்டு போலியாக CSR வழங்கிய பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் பெற்று கொண்டு கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் லட்சுமி என்பவர் கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் சொத்துக்களின் பத்திரம் காணாமல் போனதாக அதிகமாக வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமாருக்கு வந்த தகவலின்பேரில் காவல்துறை உயர் அதிகாரிகளின ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது CSR பெற்ற சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்தனர். அப்போது இது போலியானது உள்நோக்கம் கொண்டது என தெரியவந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் அவர்கள் காவல்துறைத் துணைத்தலைவருக்கு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் லட்சுமி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

அப்போது புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி அவர்கள் CSR வழங்கியது உண்மையென தெரிய வந்தது. அதன் பின்னர் புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி மீது விழுப்புரம் சரக்கு காவல்துறைத் துணைத்தலைவர் உமா அவர்களுக்கு தகவலை தெரிவித்தார். அதன் அடிப்படையில் புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக காவல்துறையினர் குட்கா போதை பொருட்கள, தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளுக்கு விற்பனையை தடுக்க தவறியதால் காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர், காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தற்போது போலி CSR வழங்கியதில் புவனகிரி காவல் ஆய்வாளர் லட்சுமி பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.