அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளி NSS மாணவர்கள் சார்பில், பொன் குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இன்று காலை 11.00 மணிக்கு NSS சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் திரு. ரோஸ் அவர்கள் தலைமையேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ. பாலசுப்பிரமணியன், மாவட்ட தொடர்பு அலுவலர் கே.செல்லபாண்டியன், பள்ளித் தலைமை ஆசிரியை ப.தனம் ஆகியோர் முன்னிலையில் முகாம் தொடங்கப்பட்டது.

NSS திட்ட அலுவலர் பஞ்சபகேசன் (முதுகலை விலங்கியல் ஆசிரியர்) வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட தொடர்பு அலுவலர் மாணவர்களுக்கு ஆலோசனையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். செந்துறை தனம் மருத்துவமனை மருத்துவர் தினேஷ் ராஜேந்திரன் NSS மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார். மேலும், SMC துணைத் தலைவர் முருகானந்தம், இருபால் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். முடிவில், NSS திட்ட உதவி அலுவலர் வேல்முருகன் நன்றியுரை ஆற்றினார்.