பீகார் சட்டப்பேரவையில் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் அல்லது நவம்பர் 2025 இல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்திற்கும் 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் அடுத்த ஆண்டு 2026 தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்தை தொடர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 375 பொருட்கள் வரையில் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறை நவராத்திரியின் முதல் நாளிலிருந்து கிட்டத்தட்ட 400 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்து செப்டம்பர் 22, நடைமுறைக்கு வந்துள்ளது. . புதிய சீர்திருத்தத்தின் கீழ், அரசாங்கம் ஜிஎஸ்டி விகித முறையைத் திருத்தியுள்ளது, இது முந்தைய 5%, 12%, 18%, மற்றும் 28% என 4 அடுக்கு முறையிலிருந்து 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளாக மாறியுள்ளது. தொடரும்…