சென்னை பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நைசாக பேசி இருக்கையில் அருகே நைசாக அம்ர்ந்து நகைப்பறித்துக் கொண்டு தப்பிய இளைஞரின் சிசிடிவி கட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நகைப்பறிப்பு சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், இன்று சென்னை பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் திட்டமிட்டு நகைப்பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் இன்று காலையில் பிளாட்பார்மில் உள்ள இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காக காத்து இருந்தார். அப்போது ரயில் நிலையத்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லை அந்த பெண் மட்டுமே தனியாக இருந்ததாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் நைசாக அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தார்.

பின்னர் அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கையிலேயே பக்கத்தில் அமர்ந்தார். அந்த பெண் வேறு பக்கம் பார்க்கும் போது நைசாக கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தார். உடனடியாக சுதாரித்து எழுந்த அந்த பெண் நகையை பறிக்க விடாமல் தடுக்க முயற்சித்தார். எனினும் அந்த இளைஞர் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் உதவி கேட்டு கத்தி சத்தம் போட்டார். எனினும் அருகில் யாரும் இல்லாததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான சிசிடிவி ட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.