தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் திய குடும்ப அட்டை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, பட்டா பிரச்சனை உள்ளிட்ட மக்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்பார்கள். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கலாம். அவர் எந்த துறை சம்பந்தப்பட்டதோ அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவிடுவார்.

மேலும், தமிழக அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழைகள் இலவச மனைப்பட்டா பெற முடியும் . அதேநேரம் அரசு துறைகளுக்கு ஆட்சேபனை (நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள்) இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு (குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும்), 3 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. அவ்வப்போது இலவச வீட்டு மனை பட்டாவை அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது, தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் நேற்று வழங்கப்பட்டது