மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆரோக்கியமான உணவு முக்கியம். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆகையால், பள்ளி வளாகத்தில் இனி சமோசா, வடபாவ், சாக்லேட், ஐஸ்கிரீம், சிப்ஸ், குளிர்பானங்கள் உள்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை விற்பனைக்கு மகாராஷ்டிராவில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ”அதிகப்படியான கொழுப்பு, இனிப்பு மற்றும் உப்பு உள்ள உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதன்படி வடபாவ், சமோசா, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், சிப்ஸ், குளிர்பானங்கள், இனிப்பு பானங்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்திலும், பள்ளியில் இருந்து 50 மீட்டர் சுற்றளவிலும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த உணவுகள் தொடர்பான விளம்பரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்வகையில் உணவு பழக்க வழக்கங்களை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு என்பது மாநில அரசு, மாநில அரசின் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், உறைவிட பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் மொத்தம் 1.08 லட்சம் பள்ளிகளுக்கு பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பள்ளி கேன்டீன், ஹாஸ்டல் கேன்டீன், மதிய உணவு தயாரிக்கும் கிச்சன், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் சமையல் கூடங்களில் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு தொடர்பான தகவல் பலகை, உணவு பாதுகாப்பு சூப்பர்வைசர், ஹெல்த் மற்றும் வெல்நஸ் அக்டிவிட்டிஸ் நடத்துவதோடு, பாதுகாப்பான குடிநீர், தூய்மையான கிச்சன் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.