விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் தனது கடைசி காலங்களில் துணை வேண்டும் கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து குழந்தையை பெற்றெடுத்து குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் மனுவில் குழந்தையுடைய தந்தை பெயரை பூர்த்தி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி M.S. ரமேஷ் அவர்கள் பணி நிறைவு பெறுவதற்கு முன்பு வழங்கிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வீட்டை கட்டிப் பாரு, கல்யாணத்தை நடத்திப் பாரு என்று சொல்வதுண்டு. இவை இரண்டுமே காலங்காலமாய் நிலைத்து நிற்பதும் அவசியம். அப்படிட்ட கல்யாணம் என்பது குடும்ப கௌரவம், சமுதாய அங்கீகாரம் மற்றும் இரு குடும்பங்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்த வரன் பார்ப்பது, ஜாதகம் அல்லது மனப் பொருத்தம் பார்த்து, இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கலாம் அல்லது அவள் விழிப்பட்டு என் இதயம்.. அவள் போகும் பாதை… என்னுடைய கால் தடங்களாக… என்னை அவளிடம் அழைத்து செல்ல… இரு மனங்கள் ஒரு மனங்களாக ஒன்றிணைந்து பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி நடைபெற்ற காதல் கல்யாணம் நடக்கலாம்.
ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமி தான் உண்டு. அதுபோலத் தான் குடும்ப கப்பலும் புரிதல் என்ற அடிப்படை வேண்டும். இப்படிட்ட குடும்பம் என்னும் கப்பலில் புரிதல் இல்லாமல் இருக்கும்போது குடும்ப வன்முறைகள் வெடிக்க திசைக்கொரு ஒரு பக்கம் பிரிந்து விவகாரத்துகள் பெறுகின்றனர். இப்படி திருச்சியை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் தனது கடைசி காலங்களில் துணை வேண்டும் கருதி ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்கிறாள்.
அதனை தொடர்ந்து, விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அந்த செயற்கை கருத்தரிப்பு பெண் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தை பூர்த்தி செய்யாமல் விட்டுள்ளளார். ஆனால் சம்பப்பட்ட அதிகாரிகள் அந்த பெண்ணை தந்தை பெயரை பூர்த்தி செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண் மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்ட போது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி M.S. ரமேஷ் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.
அந்த தீர்ப்பில் தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையை பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை தந்தையுடைய வருமானம் இன்றி தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும், வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலே போதும் தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து இனிஷியல் சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும் பள்ளி சேர்க்கை & சொத்து பதிவு ஆகியவற்றிற்கும் இது பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி M.S. ரமேஷ் அவர்கள் பணி நிறைவு பெறுவதற்கு முன்பு வழங்கிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.