மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று நடைபெறும் வன்னியர் சங்கத்தின் பிரம்மாண்டமாக மகளிர் மாநாட்டு முகப்பில் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் புகைப்படம் பெரிய அளவில் இடம் பெற்று தமிழக அரசியலில் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே வன்னியர் சங்கத்தின் பிரம்மாண்ட மாநாடு, பாமக பொதுக்குழு, வன்னியர் மகளிர் மாநாடு என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளில் தந்தை மகன் தனித்தனியாக பங்கேற்று வருகின்றனர். கடைசியாக இருவரும் வன்னியர் சங்க மாநாட்டில் ஒன்றாக பங்கேற்று இருந்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் இன்று வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் அன்புமணியின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. மாநாட்டு முகப்பு தொடங்கி மேடை வரை பல்வேறு இடங்களில் பேனர்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் எதிலுமே அன்புமணியின் புகைப்படம் இடம்பெறவில்லை.
இதற்கான ஏற்பாடுகளை செய்தது ஜி.கே. மணி எனக் கூறப்படுகிறது. மேலும் மாநாட்டு முகப்பில் மிக பிரம்மாண்டமாக ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சரஸ்வதியின் புகைப்படம் இடம் பெற்று மிழக அரசியலில் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது.