திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக முப்பெரும் விழா மிகபிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா, தேர்தல் ஆணையம் மற்றும் மோடி அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உத்தரையின்படி மெழுகுவர்த்தி ஏந்திய கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் விழா திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் K. அஜித் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்த முப்பெரும் விழாவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜா அவர்கள் முன்னிலையில், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தலைவர் ரோஜர் அவர்கள், திருத்துறைப்பூண்டி நகர மன்ற உறுப்பினர் சங்கர வடிவேல், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஸ்டீபன் அவர்கள், திருத்துறைப்பூண்டி மேற்கு வட்ட தலைவர் தியாகராஜன், திருத்துறைப்பூண்டி கிழக்கு வட்ட தலைவர் பாஸ்கர் அவர்கள், மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள், வட்டார செயலாளர் அழகன் அவர்கள் மற்றும் RTGS பிரிவின் தலைவர் குணா மைதீன் முதலியனோர் இந்த விழா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாகிர், மாவட்ட துணை தலைவர் பாலாஜி, விவசாயின் மாவட்ட தலைவர் நீலன் அசோகன், ஆராய்ச்சி துறையின் மாநில பொதுச் செயலாளர் காரா ரமேஷ், OBC பிரிவின் மாநில செயலாளர் அண்ணன் ஆனந்த் ரெட்டி, திருத்துறைப்பூண்டி நகர மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், இலங்கை காங்கிரஸ் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் வினோத், நிஜாம், இளைஞர் காங்கிரஸ் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், நன்னிலம் சட்டமன்ற தொகுதி தலைவர் சரவணன், மன்னார்குடி நகர துணைத் தலைவர் லோகேஷ், திருத்துறைப்பூண்டி வட்டாரத் தலைவர் பேரழகன் மற்றும் திருவாரூர் மகிளா காங்கிரஸ் தலைவி உஷாராணி ஆகியோர்கலந்துகொண்டனர்.