அரியலூரில் தமிழப் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, தமிழப் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்றக்குழு தலைவர் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் நல்லப்பன், பொருளாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், செயலாளர் கதிர் கணேசன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பொருளாளர் புகழேந்தி நிதி நிலை குறித்தும் பேசினார். மேலும் பொறியாளர் நாகமுத்து சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து பொறியாளர் நாகமுத்து அவர்களுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்தனர். இந்த கூட்டத்தில் பொறியாளர் அறிவானந்தம் தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன் மங்கயற்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர.
இந்த கூட்டத்தில், வருகிற இரண்டாம் தேதி அமைப்பின் பொதுக்குழுவை அரியலூரில் கூட்டுவது பண்பாட்டுச் செம்மல் விருது வழங்குவது குறித்து பொது குழுவில் முடிவெடுப்பது பண்பாட்டுப் பேரமைப்பின் 12 நோக்கங்களையும் நிறைவேற்றுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அறிவானந்தம் வரவேற்றார். முடிவில் மங்கையர்கரசி நன்றியாற்றினார்.