“துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டு எடுப்பதும் தேசபக்திதான். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்
மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சௌராஷ்டிரா கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது, “துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டு எடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியை பார்த்தேன். நதி இருக்கிறது..
ஆனால், தண்ணீர் எங்கே? இளைஞர்கள் நதியை மீட்டு எடுக்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து நலத்திட்டங்களையும் ஆய்வு செய்தார்.