காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் 5 மணி நேரம் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது “என்னை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினார்கள்; நான் என்றும், எப்போதும் திமுகவில் தான் இருப்பேன் என முழக்கமிட்டபடி சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்.
கடந்த ஜூன் 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதோடு, ஒருமையில் பேசியதாக கூறி தவெக நகரச் செயலாளர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆளம் கட்சியினரின் மேல் பொதுமக்களின் அதிருப்தி குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்துப் பேசினேன். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதால் தன்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன், அனிதா ராதாகிருஷ்ணன் சாதாரண மனிதர் கிடையாது. அவர் முன்னாள் அமைச்சர். தற்போது எம்எல்ஏ. அவருக்கு முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா என்று கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், அவருக்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த சற்று நேரத்திலேயே தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்குச் சென்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து அனிதா ராதாகிருஷ்ணன் 5 மணி நேரம் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது “என்னை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினார்கள்; நான் ஒத்துக்கொள்ளவில்லை.. நான் என்றும், எப்போதும் திமுகவில் தான் இருப்பேன் என முழக்கமிட்டபடி சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்.