கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் அமைத்துள்ள தேநீர் கடைக்கு பெப்சி கோ நிறுவனம் சார்பாக சப்ளை செய்யப்பட்ட குளிர்பானத்தில் குப்பைகளும் தூசிகளும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் உடனடியாக விநியோகம் செய்தவர்களிடம் தெரிவித்த பொழுது “SORRY” தலைவா தெரியாம நடந்துவிட்டது.பெப்சிகோ நிறுவனத்தில் மூன்று முறை செக்கிங் செய்த பின்பு தான் விற்பனைக்கு வருகிறது.இருந்தாலும் ஏன் இந்த தவறு என்று தெரியவில்லை என்று விநியோகம் செய்பவர்கள் கூறிவிட்டார்கள்.
இது குறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், மினி பாட்டில்களில் எக்ஸ்ப்ரிடேட் மற்றும் மேனுஃபேக்சரிங் டேட் தெரிவது இல்லை. நல்லவேளை இந்த பாட்டிலை நான் பார்த்ததால் தப்பித்து விட்டேன், தப்பி தவறி வாடிக்கையாளர்களிடம் கொடுத்திருந்தால் என் நிலைமை என்ன ஆயிருக்கும். ஒருவேளை இந்த தவறை நான் செய்துவிட்டு உணவு பாதுகாப்புத்துறை இடம்”SORRY” என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? ஆகையால் ஏன் எப்பொழுதும் பெப்சிகோ நிறுவனத்தின் மீது நடவடிக்கையை எடுக்கப்படுவதில்லை என்ன காரணம்? என கேள்வி எழுப்பினார்.