கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் இன்று மாலை 5 மணிக்கு பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் என திமுகவின் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முழு வீச்சோடு மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக முப்பெரும் விழாவில் 50 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு நுழைவு வாயில் கோட்டை போல வடிவமைக்கப்பட்டு இரண்டு லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கரூர் மாநகரம் முழுவதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. முப்பெரும் விழாவால் கரூர் மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரம் சார்பாக முப்பெரும் விழாவிற்கு நான்கு பேருந்துகளில் திமுக கழக உடன்பிறப்புகள் சென்று வர ஆனைமலை திமுக நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது சமயம் நகர துணை செயலாளர் அபுதாஹிர், அவருடன் திமுக கழக உடன்பிறப்பு கலந்து கொண்டு சிறப்பித்தார்.