அன்று புராணங்களிலும், இதிகாசங்களிலும் நடந்த சம்பவமெல்லாம், இன்று நடந்து கொண்டு இருக்கின்றன.. கட்டிய கணவனுக்கு விஷம் வைத்து கொல்லும் சம்பவங்களும், உயிருக்கு உயிராகும் நேசிக்கும் காதலனை, கூலிப்படை வைத்து பெண்கள் கொலை செய்யும் சம்பவங்கள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க மற்றொரு புறம் இப்படியுமா பெண்களின் நிலை என நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்துக் கொண்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நகரில் சூதாட்டத்துக்கு அடிமையான கணவர், சுமார் 7 ஏக்கர் நிலத்தை வைத்து இழந்துவிட்டார். பிறகு மனைவியின் நகைகளையும் சூதாட்டத்தில் வைத்து இழந்துவிட்டார். ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவியை அடமானம் வைத்தும் சூதாடிவிட்டார். சூதாட்டத்தில் மனைவியை வைத்து விளையாடி தோற்றும் போய்விட்டார்.
இதனால், தன்னுடைய மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், நண்பர்களை அந்த கணவர் அனுமதிக்க தாகத்துக்கு தண்ணீர்கூட தராமல் அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்களை செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனைவியின் கை விரலையும் உடைத்து கணவன் சித்ரவதை செய்தார்.. இறுதியில் அப்பெண் அங்கிருந்து தப்பிச்சென்று “112 பெண்கள் உதவி” எண்ணுக்கு அழைத்துள்ளார்.
அதன்பின்னர் காவல்துறையினருக்கு புகார் தரப்பட்டது.. தனக்கு நடந்த வன்கொடுமைகளை, நீதிமன்றத்தில் மட்டுமே சொல்வேன் என்று அந்த பெண் ஆவேசமாகவும் கூறியது நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை அப்போது ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவம் குறித்த விசாரணையும் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் இங்குள்ள கிராமத்தை சேர்ந்த சூதாட்டத்திற்கு அடிமையானவர். சூதாடி, ரூ.50 ஆயிரம் வரை கடனுக்கும் ஆளாகி இருக்கிறார். இந்த கடனை அவர் தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் வாங்கி இருந்தார். ஆனால், அந்த கடனையும் அடைக்க முடியவில்லை.. ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர துவங்கினார்கள். இதனால் கடனை அடைப்பதற்காக நண்பர் ஒருவருக்கு, தன்னுடைய மனைவியை விற்றுவிட்டார்.
உடனே அந்த நண்பரும், பாலியல் அடிமையாக நினைத்து, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். நாளுக்கு நாள் அவரது கொடுமை தாங்க முடியாத அந்த பெண், அங்கிருந்து தப்பி இந்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு ஓடி கணவர் மீதும், கணவரின் நண்பர் மீதும் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் Zero FIR அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, அதனை தார் காவல் நிலையத்துக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.