பல கோடி மக்கள் வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம், ஆளுநருக்கு இருப்பது எப்படி?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, “ஆளுநர் யாருன்னு உங்களுக்கு தெரியும். அவர் BJP, RSS உறுப்பினர். எப்பவுமே ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள், எந்த மாநிலத்தில் அதற்கு அதிகாரத்தில் இல்லையோ அங்க அவங்க ஆட்களை போட்டு, எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல் மக்களால் தடுப்பார்கள்.
தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமிக்கப்பட்ட ஒற்றை நபருக்கு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால், அவர் கையெழுத்து போட்டா தான் செல்லும் என்றால் இது மக்களாட்சி ஜனநாயகம்னு எப்படி நம்புறது? இத்தனை கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி வருது? இது எப்படி மக்களாட்சி என்று ஏற்பது? புதுச்சேரியில் ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற விடவில்லை கிரண்பேடி. தன்னிச்சையாகவே இவர்களாக ஆய்வு செய்ய கிளம்பிவிடுவது, இவர்களாக எல்லாவற்றையும் செய்வது, இதெல்லாம் கொடுமை” என சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து சீமான் பேசுகையில், “ஆந்திர காட்டுக்குள்ள 20 தமிழர்களை இதே சந்திரபாபு நாயுடு தலைமையிலான காவல்துறைதான் சுட்டு கொன்றது. நாங்க வறுமையின் காரணமா அந்த செம்மர கட்டையை வெட்ட வந்தோம்ங்கறதுதான் இதற்கான காரணம். நாங்க வெட்டும்போது சான்றுகளோடு பிடிக்கல. நாங்கள் எந்த பன்னாட்டு கார்ப்பரேட்டின் கைக்கூலிகள் கிடையாது. பக்கத்து மாநிலத்தில் இருக்கிற சாதாரண மக்கள். மனச்சான்றோடு எல்லாரும் பாருங்க. எங்களை கைது பண்ணி சிறை பண்ணலாம். நாங்க வழக்காடி உயிரோட வெளியில வரலாம். ஆனா எதுக்காக சுட்டு உடைய எல்லாம் கழற்றிவிட்டு, விறகு கட்டையில ஒரு எண்ணு, எங்க கால்லயும் ஒரு எண்ணை போட்டு வைக்கனும்? மரக்கட்டையும் தமிழன் உயிரும் ஒன்னுன்னா?
மரக்கட்டையும் மனித உயிரும் ஒண்ணான்னு இந்த நாட்டுல யாராவது ஒருவர் கேட்டிருக்கிறாரா? உயிர்களை பலி கொடுத்த குடும்பத்துக்கு இந்த நாடு கொடுத்த காசு எவ்வளவு? பசிக்காத தானே பிழைக்கப் போனேன். வெட்ட வந்த கூலி என் மாநிலத்தில் இருந்தான் வந்தவன். வெட்டி ஏத்துன முதலாளி எங்கடா இருந்தான்னு கேட்டிருக்கணுமா இல்லையா? அவன் மேல ஏன் நீ வழக்கு போடல? அவனை ஏன் கைது செய்யல?” என சீமான் கேள்வி எழுப்பினார்.