கவுன்சிலர் கூட ஆகாமல், ‘அவரை தோற்கடித்து விடுவேன்; இவர் எனக்கு எதிரி’ என கூறுவது பக்குவமில்லாத வார்த்தை. ஒரு மாநாடு நடத்திவிட்டு எதிரி என பேசுவதையெல்லாம் ஏற்க முடியாது” என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன். ஒரு கொடிய ஒழுங்கா நடவும், ஒரு மாநாட்டை ஒழுங்கா நடத்தவும் துப்பில்லை இந்த லட்சணத்தில் இதுல அடுத்த முதல்வர்னு சொல்றாரு என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சனம்.
உன்னுடைய கொள்கை என்ன என்று முதலில் சொல்லு.. ரசிகர்களை பிழிந்து பணம் சம்பாதித்தை தவிர என்ன தெரியும் என தமிழக பாஜக மூத்த தலைவர் H .ராஜா கேள்வி. அண்ணாவிடம் MGR பாடம் படித்தார். திமுக வளர்ச்சிக்கு MGR பாடுபட்டவர். ஆனால் மதுரையில் ஒருவர் மாநாட்டை நடத்தி விட்டு, ஃபாஸ்ட் புட் போன்று நேரடியாக முதல்வராக முயற்சிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி இப்படி சமூக வலைத்தளங்களில் பேச காரணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.
மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சுமார் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசுகையில் “ஒரு கானகத்தில் சிங்கம், புலி, நரி என்று பல்வேறு மிருகங்கள் இருந்தாலும் சிங்கம்தான் காட்டின் ராஜா. அந்த சிங்கம் வேட்டைக்குப் போனாலும் ‘சிங்கிளாக’ தான். தன்னைவிட பெரிய விலங்கைதான் வேட்டையாடும்.
அதுதான் நம் நிலைப்பாடு. சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை என்றும் மறக்க முடியாது. தவெகவின் அரசியல் உண்மையானது, உணர்வுப்பூர்மானது, நல்லவர்களுக்கானது, நாட்டு மக்களுக்கானது, நல்லதை மட்டுமே செய்யும் அரசியல்.
விக்கிரவாண்டி மாநாடு தமிழக அரசியலின் தட்பவெப்பத்தையே மாற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல் ஒற்றைக் குரல் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். இந்தக் குரல் மாநில உரிமைக்காக, பெண்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக, சம உரிமைக்காக ஒலிக்கும் குரல். இதற்கு எதிராக எத்தனை கூக்குரல் வந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஓயாது.நான் கட்சியை ஆரம்பிக்கும் முன்னர் அத்தனை விமர்சனங்கள் எழுந்தன. அவரே ஆரம்பிக்கவில்லை, இவரா ஆரம்பிக்கப்போகிறார் என்றார்கள். அப்புறம் கட்சியை அறிவித்தவுடன். கட்சிதானே ஆரம்பித்திருக்கிறார் என்றார்கள். அப்புறம் மாநாடு நடத்தினேன்.
இப்போது இரண்டாவது மாநாடு நடக்கிறது. இப்போது கட்சி ஆரம்பித்தால், மாநாடு நடத்தினால் மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. ஆட்சியைப் பிடிப்பது ஈஸி இல்ல. ஷூட்டிங்கில் இருந்து வந்து ஆட்சியப் பிடிப்பாரா? என்றுசொல்கிறார்கள். இந்தக் கூட்டம் எப்படி ஓட்டா மாறும் என்று இன்னொரு பக்கம் விமர்சனம், என்னைப் பற்றிப் பேசும் அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். இந்தக் கூட்டம் ஆட்சியாளர்களுக்கு வேட்டா, நம்மள கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா மாறும். நான் அரசியலுக்கு வந்தது பெண்கள், பெண்குழந்தைகள், முதியவர்கள், ஆதரவற்றோர், மூன்றாம் பாலினத்தவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என எல்லோருக்கும் நல்லது செய்யவே.
நமது ஒரே கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக தான். நமக்கு, யாருக்காகவும் எதற்காகவும் எந்த பயமும் இல்லை. நாம் கூட்டணி வைத்து ஏமாற்றும் கட்சி கிடையாது. பாசிச பாஜகவுடன் உறவு வச்சுக்க நாமென்ன உலக மகா ஊழல் கட்சியா? நாம யார் தெரியுமா? இந்தியாவின் மாபெரும் சக்தி கொண்ட மகத்தான வெகுஜன மக்கள் படை. நாம் எந்த அடிமைக் கூட்டணியிலும் சேர வேண்டிய அவசியமில்லை. ஒருபுறம் RSS-ஸிடம் அடிபணிந்து கொண்டு, இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணி அமைப்பதெல்லாம் நாம் செய்வதில்லை. கூட்டணி பற்றி சஸ்பென்ஸ்லேயே சஞ்சாரம் செய்யுங்கள். 2026 தேர்தலில் தவெக – திமுக இடையே தான் போட்டி.
அதனால், அலையன்ஸ வச்சு தப்பிச்சுடலாம்னு நினைக்குறவங்க கனவு ஒரு நாளும் மெய்ப்படாது. பாசிச பாஜக, பாய்சன் திமுகவுக்கு எதிராக மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுத்துள்ளோம். மாண்புமிகு பிரதமர் மோடி ஜி அவர்களே, 3-வது முறையாக நீங்கள் தான் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள்? நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை… சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சதி செய்யவா? மக்கள் நலனுக்காக, அவர்களின் சார்பில் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். அது போதும். செய்வீர்களா?
இல்லை, மக்களுக்காக ஒன்றும் செய்யாமல் 2029 வரை சொகுசுப் பயணம் போகலாம் என்று திட்டம் போடுகிறீர்களா?. நீங்கள் என்ன தான் திட்டம் போட்டாலும், தாமரை இலையில் தண்ணி ஒட்டாது, தமிழ்நாட்டு மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவார்கள்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் மதுரை. ஆனால், கீழடி வரலாற்றை மறைத்து எங்கள் நாகரிகத்தை அழிக்க உள்ளடி வேலை செய்யலாம்னு நினைக்குறீங்க. உங்கள் எண்ணெமெல்லாம் ஈடேறாது
தமிழகத்தில் MGR ‘மாஸ்’ தலைவர். தனது எதிரியைக் கூட கெஞ்ச வைத்தவர் MGR. ஆனால் அந்தக் கட்சியை இப்போது கட்டிக் காப்பது யார்? அது எப்படி இருக்கிறது. அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். அதனால், என்ன வேஷம் போட்டுக் கொண்டு வந்தாலும் பாஜகவின் வித்தை இங்கே வேலைக்கு ஆகாது.
அதேபோல், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் வெற்று விளம்பர மாடல் திமுக, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறது. ஆட்சியில் இல்லாவிட்டால் போங்க மோடிங்குறது. ஆட்சிக்கு வந்துவிட்டால் வாங்க மோடிங்குறது. தவிர, டெல்லியில் சீக்ரெட் மீட்டிங் நடத்துறது. ‘ஸ்டாலின் அங்கிள் வாட் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள்.’ ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், அதை செய்தது கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் கேள்வி கேட்பேன். நீங்கள் நேர்மையான, நியாயமான ஆட்சி நடத்துகிறீர்களா? பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துட்டா போதுமா. அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்றார்கள். சொன்னதெல்லாம் செஞ்சாங்களா?
இங்கே இல்லை என்று மக்கள் முழங்குகிறார்கள். அது உங்களுக்கு கேட்கிறதா? இது வெறும் சாதாரணமான முழக்கம்தான். கூடிய சீக்கிரம் மக்களை சந்திப்பேன். அது இடி முழக்கமாக மாறும். அது போர் முழக்கமாக மாறும். நான் மார்கெட் போன பின்னர் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனுடன் அரசியலுக்கு வந்துள்ளேன். அதுமட்டுமல்ல நான் நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். 30 வருடங்களுக்கு மேலாக என்னை நீங்கள் தான் தாங்கிப் பிடிக்கிறீர்கள்.உங்களுக்காக வருகிறேன். நான் உங்களை மறக்க மாட்டேன்.
ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பின்னர்தான் கட்சியே ஆரம்பித்தேன். 2026-ல் கபட நாடக திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன். வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நான் அறிவிக்கிறேன். மதுரை கிழக்கு விஜய், மதுரை மேற்கு விஜய், சோழவந்தான் விஜய், உசிலம்படி விஜய். என்னடா, எல்லா தொகுதிகளிலும் என் பெயரையே சொல்கிறேன் என நினைக்கிறீர்களா?
ஆம், 234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தவெகவின் வேட்பாளருக்கு வாக்களித்தால் அது எனக்கு வாக்களிப்பதாகும். நான் மக்களுக்காக உழைப்பதற்காக வந்துள்ளேன், எனக்கு இனி வேறு வேலை இல்லை. என் கடன் இனி மக்களுக்கு பணி செய்வதே. மக்களை நேசிக்கும் நான், மக்களுக்காக வருகிறேன். ஒரு அரசியல் தலைவன் உண்மையானவனாக இருக்க வேண்டும். நான் உண்மையான அரசியல்வாதியாக உங்களுக்காக வருகிறேன்.
என்னை சினிமாக்காரன் என்று சொல்கிறார்கள். எல்லா சினிமாக்காரனும் முட்டாள் கிடையாது , எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் கிடையாது. இங்கே, அம்பேத்கரை, நல்லகண்ணுவை, காமராஜரை தோற்கடித்தது அரசியல்வாதிதான், சினிமாக்காரன் அல்ல. நான் மக்களுக்கான நல்ல அரசியல்வாதி” என விஜய் பேசியது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமே அனல் பறக்க ஆரம்பித்தது.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், விஜய்காந்த் ஆகியோரைத் தான் சேர்த்து இருக்கிறார். இவர்கள் சிந்தனையில் கட்சி நடத்துகிறார்கள். புதிய சிந்தனையில் இல்லாமல் புதிய கட்சி எதற்கு என்று தெரியவில்லை. மேலும் அணில் ஜங்கிள் ஜங்கிள் என்று அழைக்கப்பட வேண்டும். அங்கிள் என்று ஏன் கூப்பிடுகிறது. அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார் என சீமான் கேள்வி எழுப்பினார்.
விருதுநகர் மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் S.P. வேலுமணி, விஜய் மதுரை மாநாட்டில் அதிமுக தலைமை யாரிம் உள்ளது என கேள்வி கேட்கிறார். அதிமுகவின் தலைவர் எடப்பாடி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் இவருக்கு தெரியவில்லை. சிரஞ்சீவி பிரஜா ராஜியம் என்ற கட்சியை தொடங்கி பிரம்மாண்டமான கூட்டத்தை காண்பித்து பின்னர் பிரஜா ராஜியம் கட்சியை கலைத்துவிட்டு போனது போல தவெக விஜய் காணாமல் போய்விடும் என சொல்லும் அளவிற்கு மதுரை மாநாடு.
மேலும் அண்ணாவிடம் MGR பாடம் படித்தார். திமுக வளர்ச்சிக்கு MGR பாடுபட்டவர். ஆனால் மதுரையில் ஒருவர் மாநாட்டை நடத்தி விட்டு, ஃபாஸ்ட் புட் போன்று நேரடியாக முதல்வராக முயற்சிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ என சொல்லும் அளவிற்கு மதுரை மாநாடு. உலகத்துக்கே ஒரு MGR தான் எல்லாராலும் MGR ஆகிவிட முடியாது.யார் வேண்டுமானாலும் நாங்கள்தான் அடுத்த MGR என்று சொல்லலாம். ஆனால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என சொல்லும் அளவிற்கு மதுரை மாநாடு.
கள்ளக்குறிச்சியில் சரத்குமார் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில், “அண்மையில் கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார். மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என அழைப்பதில் தவறில்லை. நீங்கள் கொடநாட்டிலே தெருவிலே நின்று கொண்டிருக்கும் போது மிஸ் ஜெயலலிதா ஜெயராமன் என சொல்லி இருப்பீங்களா? சொல்லித்தான் பாருங்களேன் என சொல்லும் அளவிற்கு மதுரை மாநாடு. தாமரை இலையில் தண்ணீர் ஒட்ட வேண்டியது இல்லை… தண்ணீரில் தாமரை மலரும்…விஜய் கொள்கை எது என்று இதுவரை சொல்லவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என சொல்லும் அளவிற்கு மதுரை மாநாடு.
திருநெல்வேலியில் நடைபெநடைபெற்ற பூத் கமிட்டிக் கூட்டத்திற்கு பின்னர், அண்ணாமலை மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தன்னுடைய பலத்தை பற்றி பேசவில்லை. 51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என கூறினால் விஜய் என்ன செய்வார். கடந்த 50 வருடமாக அந்த தாய் மாமா எங்கே சென்றார். எத்தனை பேருக்கு பேருக்கு சீர் செய்தார்? எத்தனை சகோதரிகளுக்கு காசு வாங்காம டிக்கெட் கொடுத்தாரு? என அண்ணாமலை சரமாரியான கேள்விகளை எழுப்பும் அளவிற்கு மதுரை மாநாடு.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் விஷாலின் மகுடம் படப்பிடிப்பின் போது விஜய் மக்களுக்கு நல்லது செய்வது தான் அரசியலுக்கு வருகின்றார் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என சொல்லும் அளவிற்கு மதுரை மாநாடு. கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் துவக்க விழாவில், சொடக்கு போட்டு பிரதமரை குறிப்பிட்டு பேசிய நடிகர் விஜய் தான், 2014 -ஆம் ஆண்டு ஏப்ரல் 16 -ந் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்து இருந்தார். இன்று இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று சுட்டிக்காட்டும் விஜய்,
அன்று பிரதமரை சந்தித்தது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சினை குறித்து பேசவா? கல்வியை சமத்துவமாக வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தலைவா என்ற தனது படத்தை ரிலீஸ் செய்வதற்காகவே விஜய் காத்திருந்தார். நடிகர் விஜய் அதையெல்லாம் மறந்துவிட்டார் போல. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பது போல் அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு கூப்டுற. அறிவில்லையா.. mr மோடி என்கிறாய் …முதல்வரை uncle என்கிறாய்? நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்க இளைஞர்கள் என்ன ஆவாங்க. என ரஞ்சித் பேசும் அளவிற்கு மதுரை மாநாடு.
“எதுவுமே தெரியாமல் ஒரு கட்சிக்கு எப்படி தலைவர் இருக்க முடியும்? இவரை நம்பி இவரின் பின்னால் இருப்பவர்களின் நிலை என்ன ஆகும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியும், இப்படி எல்லாம் ஒருவர் அரசியலுக்கு வந்தால் நாடு எப்படி இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு மதுரை மாநாடு விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது. மறுபுறம் ரசிகர்கள் கிட்ட வரக்கூடாது என்றால் நீங்கள் எப்படி அரசியல் செய்வீர்கள்? விஜய் ரேம்ப் வாக் செய்யும் மேடையை சுற்றி உள்ள கம்பி, அந்த கம்பிகளில் க்ரீஸ் தடவப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கூரை போடப்படாத மாநாடு தொண்டர்கள் பலரும் கடுமையான வெயிலில் பலர் நாற்காலிகளை வைத்தும், தரைக் கம்பளத்தை கிழித்து தலையில் வைத்தும்,விஜய் ரேம்ப் வாக் செய்ய உள்ள மேடையை சுற்றி உள்ள கம்பிகளில் க்ரீஸ் தடவப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது. இவற்றிற்கு எல்லாம் மேலாக சமூக வலைத்தளங்களில் உங்களின் கொள்கை என்ன என்று கேட்பதும் கொள்கையா..என என விழி பிதுங்கி நிற்பதும்… தவெகவினர் நாங்க எப்பவோ முதல்வர் ஆகிவிட்டோம் அடுத்து பிரதமர் தான் எங்கள் இலக்கு என்பதும் போன்ற வீடியோ என சமூக வலைத்தளங்களில் விஜய் நாறும் நிலை என்பது தான் நிதர்சனமான உண்மை.