பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை… நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை… என்னுடைய எதிரி யார் என்று கேட்டால் ஜாதி தான் என்னுடைய முதல் எதிரி. என சொல்வேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும், தமிழர் எழுச்சி நாளாக அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை காமராஜர் அரங்கில் நேற்றிரவு திருமாவளவனின் 63-வது பிறந்த நாள் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இந்த விழா மேடைக்கு வந்த தொல் திருமாவளவனுக்கு சிறுமி பூ கொடுத்து வரவேற்றார். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து, AI தொழில்நுட்பத் தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்ற மதச்சார்பின்மை காப்போம் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் மதச்சார்பின்மை காப்போம் தலைப்பிலேயே ஊடக அரங்கமும் நடைபெற்றது.
இதையடுத்து, இரவு நடை பெற்ற வாழ்த்தரங்கில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் MP., தமிழ்நாடு பாடநூல் ச் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசுகையில், திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானது அல்ல. அதில் பல தழும்புகள் இருக்கிறது. ஜாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. ஜாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும்.
ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அங்கீகாரம் பெறுவதே சிரமம்.

என்னுடைய ஜாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, ஜாதி தான் என்னுடைய முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்துத்தான் அளவிட முடியும் என அம்பேத்கர் என கமல்ஹாசன் தெரிவித்தார்.