பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மைதானத்தில் மின்னல் வேகத்தில் ஓடி வந்து விராட் கோலிக்கு மசாஜ் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.
கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் என்றாலே மைதானத்தில் தனக்கு பிடித்தமான அணியிலுள்ள பேட்டர்கள் அதிரடியாக ரன் குவிப்பது அல்லது பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தை நேரலையில் மைதானத்திலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கும் ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மைதானத்தில் ஒரு வீரருக்கு ஒரு சின்ன பாதிப்பு என்றால் உடனே வேகவேகமாக ஓடிவருவது ‘ஹெட் அத்லெடிக் தெரபிஸ்ட் அல்லது பிசியோதெரபிஸ்ட் களத்தில் ஏற்படும் காயங்களை உடனுக்குடன் கண்டறிந்து, அவசர முதலுதவி அளிகின்றார்கள்.

IPL வரலாற்றில் ஆண்கள் மட்டுமே ஹெட் அத்லெடிக் தெரபிஸ்ட்டாக இருந்து வந்த சூழ்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்த நவநீதா கௌதம், ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் பிரிவில் இடம் பெற்ற முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட் உலகில், ஒரு பெண் பிசியோதெரபி மற்றும் மசாஜ் தெரபி பிரிவில் இணைந்தது அப்போது ஒரு மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்பட்டது.
மைதானத்தில் மின்னல் வேகத்தில் ஓடுவது, நீண்ட நேரம் பேட்டிங் செய்வது என அதீத உடல் உழைப்பைச் செலுத்தும் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாமல் தடுக்கவும் (Muscle Recovery), காயங்களிலிருந்து மீளவும் (Injury Prevention), நவநீதா கௌதமின் ‘மேனுவல் தெரபி’ மற்றும் ‘சாஃப்ட் டிஷ்யூ’ நுட்பங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

ஆண்களின் டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு பெண் பணியாற்றுவது குறித்துத் தொடக்கத்தில் எழுந்த சில விமர்சனங்களுக்கு அணியில் இருப்பவர்களை நான் வேற்று ஆட்களாகப் பார்க்கவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் 20 சகோதரர்கள் இருப்பதாகவே உணர்கிறேன். திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடத்தில் ஆணா, பெண்ணா என்ற பாகுபாட்டிற்கு இடமில்லை” என நவநீதா கௌதம் கண்ணியமான முறையில் பதிலளித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
IPL லில் இவரது அர்ப்பணிப்பைக் கண்டு வியந்த ஆர்சிபி நிர்வாகம், மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் இவருக்கு முக்கியப் பொறுப்பை வழங்கியது. தற்போது மகளிர் அணியின் ‘ஹெட் அத்லெடிக் தெரபிஸ்ட்’ ஆகவும் நவநீதா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.