நாமக்கல் மாவட்டம், இராசாம்பாளையம் ஊராட்சி, புலவர்பாளையம் கிராமத்தில் 150 குடுப்பதிற்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனியாக ஒரு மயானம் உள்ளது. இந்த மயானம் முறையான பராமரிப்பு இன்றி மின் விளக்கு இல்லாமல் முட்புதர்களும் குப்பைகளுமாய் காணப்படுகிறது.

அதனால் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் இந்த மயானத்தில் அடக்கம் செய்ய முடியாமல் நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம்/தகனம் செய்ய வேண்டியுள்ளது. இதனை தொடர்ந்து புலவர்பாளையம் கிராம மக்கள் இது குறித்து கிராம சபை கூட்டத்தில் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.