அரியலூர் அரசு கலை கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் அரியலூர் கிளையின் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து, மூத்த அரசு கல்லூரி பேராசிரியரை கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் அரசு கலை கல்லூரி முன்பு.தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் அரியலூர் கிளையின் கிளையின் தலைவர் முனைவர் இரா. தண்டபாணி தலைமையில், கிளையின் செயலர் இரா. ஸ்டீபன் மற்றும் திருச்சி மண்டல துணைத் தலைவர் அ .சேட்டு முன்னிலையில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து. பேராசிரியர் பணி மேம்பாட்டினை கால தாமதம் இன்றி உடனடியாக வழங்கிடுக . மூத்த அரசு கல்லூரி பேராசிரியரை கல்லூரி கல்வி இயக்குனராக நியமனம் செய்க. அண்ணாமலை பல்கலைக்கழக மிகை ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யாதே. காலியாக உள்ள கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பிடுக. ஊதிய முரண்பாட்டை களைந்திடுக. கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை 50,000 ஆக உயர்த்தி வழங்கிடுக போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.