டெலிவரி ஊழியர்களுக்கு புதிய மின்சார இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் தமிழ்நாடு அரசு, இணையவழி சேவைகளில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களுக்காக (gig workers) ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில வருடங்களாகவே வாகன சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்தபடியே இருக்கிறது.. அரசும் இதனை ஊக்குவிக்கிறது. காரணம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன.
எரிபொருளின்றி வெறும் பேட்டரியில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒருமுறை சார்ஜ் செய்தால், எவ்வுளவு தூரம் செல்கிறது என்பதையும் கண்ணெதிரே அறிந்து கொள்ள முடியும்.. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு, அரசின் சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது.. அந்தவகையில், 2 ஆயிரம் உணவு டெலிவிரி ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, இணையவழி சேவைகளில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களுக்காக (gig workers) ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளதால், இதன் மூலம், டெலிவரி ஊழியர்கள் புதிய மின்சார ஸ்கூட்டர் (e-scooter) வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள Zomato, Swiggy, Zepto, Amazo, Swiggy, Zepto, Amazon, Flipkart போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 2,000 டெலிவரி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிற ஆவணங்களை கொண்டு தங்களின் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டாம். தமிழ்நாடு அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் விண்ணப்பித்தாலே போதுமானது.
பணிச்சான்றிதழ், பள்ளி சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் முதல் பக்கம், வாரிசாக பரிந்துரைக்கப்படுபவர் ஆவணம், நலவாரிய அட்டை போன்ற ஆவணங்கள் இருந்தால் ஆன்லைனில் இ-ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம். முதலில், https://tnuwwb.tn.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, Subsidy for eScooter/இ-ஸ்கூட்டர்க்கான மானியம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுடைய நலவாரிய நிரந்தர பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு லாகின் செய்ய வேண்டும..ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பித்தால் போதும்.. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதேபோல, ஏற்கனவே வாகனம் வைத்திருப்பவர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.