அமைச்சர் கில்லி சரத்குமார் பதவி விலக நடத்தும் போராட்டம் ஜனநாயக முறையில் நடைபெறும் போது காவல்துறை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை ஒடுக்கும் விதமாக, மனித உரிமை மீறலை தமிழ்ப்புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என குமரவேல் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைந்த சில நாட்களில் இருந்தே தமிழக அரசியல் களத்தில் சலசலப்புகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியில் கலந்துகொண்டு முதல்வர் ஜோசப் விஜய் நீதியுரை வழங்கிய சில மணி நேரங்களிலேயே, அவரது அமைச்சரவையை சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத்குமாரின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக முதல்வர் விஜய் தலைமையில் ஒரு பிரம்மாண்ட மாரத்தான் பேரணிபொதுமக்களிடையே நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில், அதற்கு நேர்மாறாக சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியது. கடந்த 2024 ஆம் ஆண்டு குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி காண சென்றுள்ளார். அப்போது கில்லி சரத் தனது மொபைல் திரையில் ஒரு வெள்ளை நிற பவுடரை ஏடிஎம் கார்டு கொண்டு நேர்த்தியாக கோடு கிழிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்ற வீடியோவை, தக் லைப் என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார்.
கில்லி சரத்குமாருக்கு கண்டனம் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருத்து கூறி தவெக அரசுக்கு எதிராகவும், முதல்வரின் போதை ஒழிப்பு கொள்கைக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தவெக ஆட்சிக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்த விஷயத்திற்கு சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். உடல்நலம் சரியில்லாத குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி, சிரஞ்ச் மூலம் கொடுத்ததாக அவர் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, திமுக மாணவரணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என்று காவல்துறை மறுத்துள்ளனர். அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக திமுக நிர்வாகிகளை காவல்துறை செய்தனர். அப்போது காவல்துறை, திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து, “மற்ற இடங்களில் எல்லாம் போராட்டம் நடக்கிறது. சென்னையில் திட்டமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று தடுக்கிறார்கள். கடைசி நேரத்தில் நள்ளிரவு தான் அனுமதியில்லை என்கிறார்கள். போதை மருந்து பயன்படுத்தியவரை கைது செய்ய துப்பில்லாத காவல்துறை எங்களை கைது செய்கிறது தவெக அரசு மற்றும் காவல்துறையின் அராஜக போக்கை கண்டிக்கிறோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இது குறித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் த. குமரவேல் வீடியோ ஒரு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், போராட்டம் ஜனநாயக முறையில் நடைபெறும் போது காவல்துறை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை ஒடுக்கும் விதமாக, மனித உரிமை மீறலை போல அவர்களை தரதரவென்று இழுத்துக் கொண்டு போவது, ஏதோ கொலை குற்றம் செய்தவர்களை நடத்துவர்களை போல போராட்டம் நடத்துபவர்களை நடத்துவதை தமிழ்ப்புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என த. குமரவேல் வீடியோவில் தெரிவித்துள்ளார்.