கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கிராமத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது பீகார் சிறுமி தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஆடம்பரமான பொருட்கள் விற்பனை கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடி பார்த்துவிட்டு பள்ளி மாணவியை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காணாமல் போய் ஒரு வாரம் ஆன நிலையில் நேற்று அந்த சிறுமியுடன் பீகாரை சேர்ந்த வாலிபர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மாணவியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், வடமாநில வாலிபர் திருமண ஆசை வார்த்தை கூறி தன்னை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த புல் பாபு குமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.