திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற வெளி நோயாளிச் சீட்டு (OP Slip) பெற்றுக் கொண்டிருக்கும்போது மீண்டும் போதை இருவர் இடையே சரமாரியாகத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 20 நாட்களில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மடப்புரம் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மதுவாங்க சென்றுள்ளார். உதயகுமார் மதுவாங்கி விட்டு திரும்ப வரும்போது இருசக்கர வாகனம் த்தை கீழே விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அருகே நின்ற திருத்துறைப்பூண்டி குருஷேத்தி சாலையை சேர்ந்த சிவாவிடம் கேட்டபோது இருவருக்கும் இடையேவாய் தகராறில் சண்டை று ஏற்பட்டுள்ளது. இதனிடையே நாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சண்டையை தடுக்க முயன்றபோது சிவா கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து தாக்கியுள்ளார். அந்த காயத்துடன் பிரபாகரன் திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது சிவாவும் காயத்துடன் சென்றுள்ளார். அப்போது திருத்துறைப்பூண்டிஅரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற வெளி நோயாளிச் சீட்டு (OP Slip) பெற்றுக் கொண்டிருக்கும்போது மீண்டும் இருவருக்கும் இடையே சரமாரியாகத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.