யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தட்டும். ஆனால் தமிழகத்தில் மக்களின் ஆதரவு பாஜகவுக்குதான் என அண்ணாமலை தெரிவித்தார். நாகாலாந்து ஆளுநராக இருந்த மறைந்த இல. கணேசனின் சென்னை தி.நகரிலுள்ள வீட்டுக்கு சென்று அவரது படத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இல.கணேசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர், இன்றுநடைபெறும் இல.கணேசனின் புகழஞ்சலி நிகழ்வுக்கு குடும்பத்தினருக்கு நேரில் அழைப்பு விடுத்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, இல.கணேசன் மறைவு என்பது பெரும் இழப்பு. நான் கட்சி நிகழ்ச்சி காரணமாக வேறொரு ஊரில் இருந்ததால், என்னால், இல.கணேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார்.
கட்சி பாகுபாடின்றி திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் எல்லோரும் மாநாடு நடத்த உரிமை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகமும் மாநாடு நடத்தட்டும். மக்களின் ஆதரவு பாஜகவுக்குதான் என அண்ணாமலை தெரிவித்தார்.