மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறும். அந்த வகையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
அதன்படி அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 24 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் அவர்கள், உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.