பாத்து பனிரெண்டு நாளா உங்க ஆட்சியில நடக்குறது எல்லாமே மரண ஓலமாக இருக்கு… அண்ணே இதுக்கெல்லாம் உக்காந்துனு ட்விட்டர் ட்விட் போட்டு இருக்கின்றீர்கள் என ஜல்லிக்கட்டு ஜூலி தனது எக்ஸ் பக்கத்தில் சரமாரியான கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் சூலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதான 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள இடங்களில் சிறுமியை பெற்றோர் தேடினர். பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், கோயம்புத்தூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சூலூர் அருகே உள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட சிறுமிதான் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து முட்புதரில் வீசியிருக்கலாம் என்று தகவல் பரவிய நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடந்தனர். சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இஎஸ்.ஐ மருத்துவமனை முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதானம் செய்து அவர்கள் கலைந்து செல்லவில்லை. விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், தவெக எம்.எல்.ஏ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே, CCTV காட்சிகளின் அடிப்படையில் நாகையை சேர்ந்த கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக மோகன் ராஜ் என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாத்து பனிரெண்டு நாளா நம்ம தவெக தான் ஆட்சியில் இருக்கு… விஜய் அண்ணா தான் CM… விஜய் அண்ணா உங்களுக்கு ஞாபகம் இருக்கானு தெரியல… பாத்து பனிரெண்டு நாளா உங்க ஆட்சியில நடக்குறது எல்லாமே மரண ஓலமாக இருக்கு… அண்ணே இதுக்கெல்லாம் உக்காந்துனு ட்விட்டர் ட்விட் போட்டு இருக்கின்றீர்கள் என ஜல்லிக்கட்டு ஜூலி தனது எக்ஸ் பக்கத்தில் சரமாரியான கேள்வி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.