மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி அருகே சித்தூரில், பெண் குழந்தைகள் தங்கி படித்து வரும் தனியார் குழந்தைகள் இல்லத்தில் வார்டனாக மெர்சி அன்னபூரணி பணியாற்றி வருகிறார். இந்த இல்லத்திற்கு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜசக்திவேல் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும்போது இந்த இல்லத்தில் தங்கி அருகிலுள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை, தனது அறைக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேரையூர் மகளிர் காவல்துறையினர், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜசக்திவேல், வார்டன் மெர்சி அன்னபூரணி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கிருந்த 16 பெண் குழந்தைகள் வேறு முகாமிற்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.