தமிழகத்தில் இளம் பெண்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறும் நிலையில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தற்கொலைகள் செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்கள் இளம் பெண்கள்.. அதிலும் காதலித்து திருமணம் செய்து, தங்களது கணவனுடன் வாழ்ந்து வந்தவர்கள். திடுதிப்பென இப்படி அவசர முடிவை எடுத்துள்ளனர்கள் என்பதே அதிர்ச்சியான சம்பவமாகும்.
மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்தபோது கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி மகேஷ் – லேகா.. 10 வருடத்துக்கு முன்பு , காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் தற்போது சத்தீஸ்கரில் ஒரு தனியார் கம்பெனியில் சதீஷ் வேலை பார்த்து வருகிறார்.. லேகா, கன்னியாகுமரியில் தன்னுடைய கணவர் வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். லேகாவுடன் சதீஷின் அம்மாவும் தங்கியிருந்தார்.
இந்நிலையில், வீட்டு வேலைகளை லேகா சரியாக செய்வதில்லை என்று மாமியார் அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த லேகா, வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல விருதுநகர் மாவட்டம் நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பை சேர்ந்த டெம்போ ஓட்டுநர் செல்வசரணின் மனைவி ரேஷ்மா. இருவருமே உறவினர்கள் என்பதால், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமானதில் இருந்தே தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதனால் கணவன்-மனைவி இருவருமே அடிக்கடி தகராறு செய்தும், சண்டையிட்டும் வந்துள்ளனர். அப்படித்தான் நேற்று ரேஷ்மாவிற்கும் செல்வசரணுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது..
இதைத்தொடர்ந்து செல்வ சரண் வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அழுதுகொண்டே இருந்தார்.. அளவுக்கு அதிகமாக மனமுடைந்து காணப்பட்டார்.. இறுதியில் ரேஷ்மா தற்கொலை செய்ய முடிவு செய்து ராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்த ரேஷ்மா, வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் சொல்லிவிட்டு போனையும் துண்டித்து விட்டாராம்..
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேஷ்மாவின் அம்மா, நாகர்கோவிலில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்து இதுபற்றி தெரிவித்தார். உடனே உறவினர்களும், ரேஷ்மாவின் வீட்டுக்கு ஓடினார்கள்.. ஆனால், ரேஷ்மாவின் வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு படுக்கை அறையில் ரேஷ்மா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறி துடித்தனர்.. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.