இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 7 -ந் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அரசு மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்கள், கருத்தரங்குகள், மருத்துவ பரிசோதனை முகாம்கள் மற்றும் பொதுமக்கள் வழிகாட்டும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் இராமபட்டிணம் ஊராட்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.