கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த பாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கி கொன்று மாரடைப்பால் பாட்டி இறந்துவிட்டதாக குடும்பத்தினரை நம்ப வைத்து கணவரை கொல்ல முயற்சி செய்து மாட்டி கொண்ட கள்ளக்காதல் ஜோடி. கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவில் வசித்து வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் லோகேந்திரன். ஒரு பைனான்சியரான இருந்து வருகிறார். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா அன்னூரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் உள்ளன.
இதில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் கர்நாடகா கிளையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். ஜாய்மெட்டில்டாவும், நாகேஷூம் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவதுடன், கடன் பெறுபவர்களின் வீடுகளை ஆய்வு செய்யும் பணியையும் ஒன்றாகவே சேர்ந்து செய்து வந்தனர். ஜாய்மெட்டில்டா கோயம்புத்தூரில், நாகேஷ் கர்நாடகாவிலும் உள்ளதால், வீடியோ கால் மூலம் இருவருமே பேசி வந்தனர். அலுவலக வேலையாக பேசிவந்த நிலையில், இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி, அது கள்ளக்காதலாக மலர்ந்தது.
இதனால் கள்ளக்காதலியை பார்ப்பதற்காக நாகேஷ் அடிக்கடி அன்னூர் வந்து செல்வாராம். இதற்காகவே கர்நாடகாவில் இருந்து தன்னுடைய நண்பரின் காரை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அன்னூருக்கு வரும்போதெல்லாம் இருவரும் ஓட்டலில் அறை போட்டு உல்லாசமாகவும் இருந்ததாக தெரிகிறது. இப்படிபட்ட சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் லாட்ஜ் ஒன்றில் இருவரும் தங்கியிருக்கிறார்கள். அப்போது திடீரென அந்த லாட்ஜூக்கே வந்துவிட்டாராம் ஜாய்மெட்டில்டா கணவர் லோகேந்திரன். கள்ளக்காதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்து, இருவரையுமே கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல, தனக்கு மனைவி செய்த துரோகத்தையும் லோகேந்திரனால் மன்னிக்க முடியவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட 2 நிதி நிறுவனத்தினரிடமும் ஜாய்மெட்டில்டா பற்றியும், நாகேஷ் பற்றியும் புகார் சொல்லிவிட்டார். இதனால் 2 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் கள்ளக்காதலர்கள் ஜாய்மெட்டில்டா மற்றும் நாகேஷ் தங்கள் தொடர்பை கைவிடவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி லோகேந்திரன் மதுரைக்கு சென்றபோது, நாகேஷை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் ஜாய்மெட்டில்டா. இதை வீட்டிலிருந்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஜாய்மெட்டில்டாவை கண்டித்துள்ளார்.
உடனே ஆத்திரம் அடைந்த ஜாய்மெட்டில்டா, பாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டார். பிறகு, மாரடைப்பால் பாட்டி இறந்துவிட்டதாக குடும்பத்தினரை நம்ப வைத்தார். கணவர் இருக்கும்வரை நாகேஷூடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று நினைத்த ஜாய்மெட்டில்டா, கணவர் லோகேந்திரனையும் கொல்ல முடிவு செய்தார். இதற்காக நாகேஷை கடந்த 22-ந் தேதி அன்னூருக்கு வரசொன்னார். 23-ந் தேதி நள்ளிரவு1.30 மணிக்கு வீட்டில் லோகேந்திரன் தூங்கி கொண்டு இருந்தபோது, நாகேஷை வீட்டுக்குள் வரவழைத்து இருவரும் சேர்ந்து லோகேந்திரனின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். ஆனால் அவர்களின் பிடியிலிருந்து போராடி லோகேந்திரன் உயிர் தப்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நாகேஷ், வீட்டின் பின்பக்க கதவு வழியாக எகிறி தப்பி கர்நாடகாவுக்கு சென்றுவிட்டார். உடனே லோகேந்திரன் இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் தந்தார். காவல்துறையினரும் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர். ஆனால் அதற்குள் கள்ளக்காதலியை பார்ப்பதற்காக மறுபடியும் கர்நாடகாவிலிருந்து காரில் நாகேஷ் வந்துள்ளார். கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நாகேஷ் வந்தபோது சிக்கிவிட்டார். அதன்பின்னர் நாகேஷை அன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று லோகேந்திரனை ஏன் கொலை செய்ய முயன்றாய்? என்று விசாரிக்க முயன்றபோதுதான், பாட்டி மயிலாத்தாளை ஜாய்மெட்டில்டா கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இறுதியில் ஜாய்மெட்டில்டா, நாகேஷ் இருவரையுமே கைது சிறையில் அடைத்துள்ளனர்.