ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கும் கூடுதலாக 500 சதவீதம் வரி விதிப்போம் என்றும், மிக கடுமையாக தண்டிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபராக பதவியேற்றது முதலே மண்ணின் மைந்தர் கொள்கையை கடைபிடிக்கிறார். அத்துடன் அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வர்த்தக பற்றாக்குறையை கண்டுபிடித்து அந்த நாடுகளுக்கு அதிக வரி விதிக்கிறார்.
இதற்காக அமெரிக்கா முதலில் என்ற கடுமையான கொள்கையை கடைபிடிக்கிறார். அமெரிக்காவிற்கு சலுகை தராத நாடுகளை குறிவைத்து பரஸ்பர வரி விதித்தார். மேலும் மாறி மாறி மோதிக்கொள்ளும் நாடுகளை, வரி விதிப்பேன் என்று மிரட்டி போரை நிறுத்தி வருகிறார். அந்த வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் 2022 மார்ச் மாதம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதித்தது. இதில் ஒரு பகுதியாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவூதி அரேபியாவுக்கு அடுத்த பெரிய நாடாக ரஷ்யா உள்ளது.
ஆகையால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்தால் ரஷ்யாவின் பெருளாதாரம் பெரிதும் பாதிக்கும் என பெரிய கணக்கை அமெரிக்கா திட்டம் திட்டியது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் தருவதாக ரஷ்யா அறிவித்தது. மேலும் இந்தியா அதன் எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் (ரஷ்யாவிடமிருந்து 2 முதல் 3 சதவீதம் அளவிலே இறக்குமதி செய்து வந்த நிலையில்). ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டு வந்தது. அப்போது, வெள்ளை மாளிகையில் இருந்து, ‘ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது என்பது அமெரிக்காவின் தடையை மீறுவதாகாது.
ஆனால், அந்த வர்த்தகத்தின் காரணமாக,ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தவறான தரப்போடு நின்றதாக வரலாற்றில் நினைவு கூரப்படும்’ என்று தெரிவித்து இருந்த, நிலையில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அரசியாலாக்காதீர்கள் என்று இந்தியா தெரிவித்தது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமல்லாமல் இன்று ஏற்றுமதிக்காகவும் பெறப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு செய்யப்பட்டு பல ஐரோப்பிய, ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக படிப்படியாக தற்போது இந்தியா 35 சதவிகிம் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து வாங்கி வருகிறது. அப்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தபோது ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை வழங்க முன் வந்தது. அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு மத்தியில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருவதை அப்போதைய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்து பதவியேற்ற டோனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ச்சியாக வரி விதித்து வருகின்றார்.

அப்போது, இந்தியா உடனான வர்த்தகப் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதற்காகவும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாகவும் தனித்தனியாக 25% வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் தாக்கம் ஜவுளி, தோல், இறால், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர துறைகளில் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. அமெரிக்கா உடன் இந்தியா வரியைகுறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் டிரம்ப் புதிதாக ஒரு பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறுகையில், “குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ள இருக்கிறது. இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்” என்றார்.
குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளார். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு வேளை 500 சதவீதம் வரி விதித்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.