அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்களின் மேற்பார்வையில், பொள்ளாச்சி மேற்கு ஒன்றியம் மண்ணூர் பகுதியில் அமைந்துள்ள தாம்சன் திருமண மண்டபத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம், கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் R.A. சக்திவேல் அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி மேற்கு ஒன்றியம் மண்ணூர் பகுதியில் அமைந்துள்ள தாம்சன் திருமண மண்டபத்தில் அதிமுக வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அதிமுக அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மண்ணூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் உள்ளூர் அதிமுக செயலாளர்கள், ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் முக்கிய தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.