நாட்டில் கல்வித் துறைக்கும் தொழிற்துறைக்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு முறையான திறன் பயிற்சி கொடுக்காத காரணத்தால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பட்டப் படிப்பை முடித்தும் வேலையின்றி திண்டாடி வருகின்றனர். ஆகையால் இன்றைய தலைமுறையினர் ஏதாவது வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
உலகெல்லாம் உள்ள ஒட்டுமொத்த மொள்ளமாரிகளும் இந்தியா நோக்கி படையெடுக்கின்றனர். இவற்றிற்கு துணைபோகும் நம்மில் உள்ள கூட்டுக் களவாணிகள் அவர்களுடன் கைகோர்க்கின்றனர். இந்த கூட்டுக் களவாணிகள் நரித்தந்திரம் புரியாமல் வேலையில்லாத பட்டதாரிகளின் அவர்களின் மாயைவலையில் விழுந்து படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடின்றி ஏழை, பணக்காரன் என்று தனக்கு தெரிந்தவன், தெரியாதவன் என எல்லோரின் மூளையை இவர்கள் சலவை செய்து அவர்களிடமிருந்து பணத்தை வாங்கி கொடுத்து கடைசியில் கடைசியில் அவன் கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடிக்க நாம் இன்று கம்பி என்னும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

அப்படி இந்த சம்பவம் தொடர்கதையாக மாறிக்கொண்டே உள்ள நிலையில், ஆரோக்கியம், அழகு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த பொருட்களை நேரடி விற்பனை மற்றும் மின் வணிகம் மூலம் விற்பனை செய்யும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கியூநெட். இந்தியாவிற்கான பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு அதிகாரப்பூர்வ துணை உரிமையாளராக விஹான் நேரடி விற்பனை பிரைவேட் 2011- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் இயங்கி வருகிறது. இந்தியாவில் வேலை இல்ல பட்டதாரிகள் மற்றும் பலரை மூளையை சலவை செய்து பணம் கிடைக்கும் என்ற ஆசையில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு இன்று பலர் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.
அதன் வரிசையில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள், கியூநெட் என்ற கார்ப்பரேட் பெயரைக் காட்டி தங்களை ஒரு கும்பல் அடியோடு ஏமாற்றிவிட்டதாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கண்ணீரோடு தஞ்சமடைந்துள்ளனர்.
தினக்கூலிக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் செல்லும் இந்த எளிய மக்களைக் குறிவைத்த மோசடி நபர்கள், “இனி நீங்க வெயில்ல கஷ்டப்பட வேணாம்; மாடு மேய்க்கவோ, வேலைக்கு போகவோ தேவையில்ல; வீட்ல இருந்தே லட்ச லட்சமா சம்பாதிச்சு குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்” என ஆசை வார்த்தைகளைக் கூறி, தொடர்ந்து நைசாகப் பேசி மூளைச்சலவை செய்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய கிராம மக்கள், தங்களின் செல்போன்களில் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆளுக்கொன்றாகக் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை தங்களின் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்துள்ளனர்.
இந்தத் திட்டம் ஒருவர் மூலம் மற்றொரு நபரை இணைக்கும் சங்கிலித் தொடர் முறையில் செயல்பட்டுள்ளது. புதிதாக ஆட்களைச் சேர்த்தால் பல லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி ஆரம்பத்தில் சிலருக்குப் பரிசுப் பொருட்களையும் அனுப்பிக் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளனர். மொத்தமாக இந்த ஒரு கிராமத்தில் மட்டுமே சுமார் 77 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை மக்கள் பணத்தைச் சுருட்டியுள்ளனர். ஐந்து ஆண்டுகளாகப் பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் தாங்கள் ஏமாற்றப்பட்ட கோர முகத்தை மக்கள் உணர்ந்துள்ளனர்.

இந்த மோசடியில், முகநூல் கணக்கோ அல்லது போலி மின்னஞ்சல் முகவரியோ கூட உருவாக்கத் தெரியாத கூலி வேலைக்கு போகும் எளிய மக்களுக்கு, மோசடிக் கும்பலே தன்னிச்சையாகப் போலி விபரங்களை உருவாக்கி டிஜிட்டல் ஃபோர்ஜரி செய்த அதிர்ச்சி உண்மையும் வெளிவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், லட்சுமணன் மற்றும் அழகேசன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், இதன் முக்கியப் புள்ளியான சுரேஷ் என்பவர் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதால் அவரைப் பிடிக்கவும் நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. முதற்கட்டமாகச் சில பொருட்களைக் கைப்பற்றியுள்ள காவல்துறை, முறைப்படியான நோட்டீஸ் அனுப்பி, குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கி மக்களின் பொருளாதார இழப்பை மீட்டுத் தர உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி டவுன் கரையிருப்பு பகுதியை சேர்ந்த பூரணசெல்வி மற்றும் அவரது தோழி சண்முகலட்சுமி இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கியூநெட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக திருநெல்வேலியில் பலரிடம் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். கியூநெட்டில் உறுப்பினராகி ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்கலாம்; மாதந்தோறும் பெரிய தொகை கிடைக்கும்; நாளாக நாளாக லட்சக்கணக்கில் வருவாய் வரும் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இளம்பெண்களின்நாகரிகமான தோற்றம், இனிக்க இனிக்க பேசும் பேச்சை நம்பி திருநெல்வேலி மாநகரை சேர்ந்த வேம்பு என்பவரது மனைவி தங்கமாரி கியூநெட்டில் முதலீடு செய்ய ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.
முதலீடு செய்த ரூ.5 லட்சத்தை திரும்ப கேட்டார் தங்கமாரி, அதன்பிறகும் இளம்பெண்கள் எந்த பதிலும் கூறவில்லை. இதனிடையே சந்தேகம் அடைந்து திருநெல்வேலி காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்துள்ளார். காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் உத்தரவின்பேரில் திருநெல்வேலி ஜங்ஷன் காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி மற்றும் பூரணசெல்வி ஆகிய 2 பேர் என்பது தெரியவந்த நிலையில் இருவரையும் கைது செய்து மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.