தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 7 பவுண்டரிகள் , 2 சிக்சர்கள் உட்பட 90 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்துள்ள 53 சதமாகும். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 T- 20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் ஒருநாள் தொடருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா திரும்பி பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் ராஞ்சியில் தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 30-ந் தேதி நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கிய நிலையில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.
விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தார். மேலும் ரோஹித் சர்மா 57 ரன்களும், விராட் கோலி 135 ரன்களும் குவித்து, இந்திய அணி 349 ரன்கள் எடுக்க அடித்தளமிட்ட 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இன்று ராய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மாவுடன் இணைய 4.5 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்து நிலையில் நந்த்ரே பர்கர் பந்து வீச்சில் ரோஹித் சர்மா 8 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைய 9.4 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து நிலையில் மார்கோ ஜான்சன் வீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து நான்காவது வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலிவுடன் இணைந்து தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை நிதானமாக விளையாடினார்.
அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 35.4 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்து நிலையில் மார்கோ ஜான்சன் வீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 83 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 105 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஐந்தாவது வீரராக களமிறங்கிய அணி தலைவர் கே. எல். ராகுல் மற்றும் விராட் கோலிவுடன் இணைந்தார். மேலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை காட்டிய 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 90 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்துள்ள 53 சதத்தை பூர்த்தி செய்தார். 39.1 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து நிலையில் லுங்கிசனி எங்கிடி வீச்சில் விராட் கோலி 93 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆறாவது வீரராக களமிறங்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் கே. எல். ராகுலுடன் இணைந்தார். ஆனால் வாசிங்டன் சுந்தர் 8 பந்துகள் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஏழாவது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் கே. எல். ராகுலுடன் இணைந்து விளையாட நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் கே. எல். ராகுல் 2 பவுண்டரிகள் உட்பட 27 பந்துகளில் 24 ரன்களும் ஆட்டமிழக்காமல் 368 ரன்கள் எடுத்தனர்.