“ஒரு குழந்தையின் மரணத்தைப் பற்றிப் பேசும் போது ஒரு காவல்துறைத் தலைவர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிக்கு எப்படிச் சிரிக்க முடிகிறது? என்று பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோயம்புத்தூர் சூலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதான 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள இடங்களில் சிறுமியை பெற்றோர் தேடினர். பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், கோயம்புத்தூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சூலூர் அருகே உள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட சிறுமிதான் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து முட்புதரில் வீசியிருக்கலாம் என்று தகவல் பரவிய நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடந்தனர். சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இஎஸ்.ஐ மருத்துவமனை முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சமாதானம் செய்து அவர்கள் கலைந்து செல்லவில்லை. விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், தவெக எம்.எல்.ஏ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே, CCTV காட்சிகளின் அடிப்படையில் நாகையை சேர்ந்த கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக மோகன் ராஜ் என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி, மேடைக்கு மேடை ஆக்ரோஷமாகப் பேசி ஆட்சிக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். ஆனால், தற்போது அவரது ஆட்சியில் ஒரு பச்சிளம் சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்திற்குப் பிறகு, அவர் நடந்து கொள்ளும் விதம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் கோயம்புத்தூருக்கு நேரில் வந்த மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர். வி. ரம்யா பாரதி, இந்த கொடூர வழக்கின் விசாரணைக் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அந்த பிரஸ் மீட்டின் போது காவல்துறைத் தலைவர் ஆர். வி. ரம்யா பாரதி முகத்தில் புன்னகையோடு (சிரித்தபடி) பேசியது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் பெரும் கொதிப்படையச் செய்துள்ளது. “ஒரு குழந்தையின் மரணத்தைப் பற்றிப் பேசும் போது ஒரு காவல்துறைத் தலைவர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிக்கு எப்படிச் சிரிக்க முடிகிறது? இந்த அரசின் அதிகாரிகளுக்குப் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலி கொஞ்சமாவது புரிகிறதா?” என்று பொதுமக்கள் சமூக வலைதளங்களில் காவல்துறைத் தலைவரின் வீடியோவைப் பகிர்ந்து தங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.