பாண்டிச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து பாண்டிச்சேரி போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி உத்தரவிட்டுள்ளது. பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை உள்ள சோலை நகரில் கடந்த 2024 ஆண்டு ஏப்ரல் மாதம் 2 -ந் தேதி, 5-ஆம் வகுப்பு பயின்று வந்த 9 வயது மாணவி தனது வீட்டருக்கே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாயமாகிவிட்டார். பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
பின்னர் 2 நாட்கள் கழித்து அந்த சிறுமி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியானது.
இதையடுத்து சிறுமியை கொன்றவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 55 வயது முதியவர் விவேகானந்தன், 18 வயது கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை ஐஸ்கிரீமை காட்டி அழைத்து சென்ற கருணாஸ், விவேகானந்தனின் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். கருணாஸைத் தொடர்ந்து விவேகானந்தும் அந்த குழந்தையை பலாத்காரம் செய்த போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்தது.
இதையடுத்து குழந்தையை இருவரும் மூட்டை கட்டி கால்வாயில் வீசிப்பட்டு மறுநாள் ஒன்று தெரியாதது போல் நடித்து ஊர்மக்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியது தெரியவந்தது. இந்நிலையில் விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
மேலும், போலீசார் 500 பக்கம் கொண்டு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷோபனா தேவி முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் காலாப்பட்டு சிறையில் இருவரும் தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
அப்போது விவேகானந்தன் தான் அணிந்திருந்த சட்டையை வைத்து கழுத்தை நெரித்து தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்துள்ளார். உடனே அங்கிருந்த கருணாஸ் சப்தம் போட்டதுடன் வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றினார். இதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே விவேகானந்தன், கழிவறைக்குச் சென்று துண்டால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கு கருணாஸிடம் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 30-ந் தேதி வழங்கப்பட்டது. அதில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்த புதுவை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி, மே 5 -ந் தேதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் 5-ந் தேதி கருணாஸுக்கான தண்டனையை வெளியிடவில்லை. தண்டனை விவரங்கள் 8-ந் தேதி வழங்கப்படும் என்றார். அதன்படி இன்றைய தினம், குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.