திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் சி.மாலதி தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ஜி.கலைச்செல்வி கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் எம்.சுபாஸ்ரீ, ஒன்றிய பொருளாளர் ஆர்.விமலா மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்றிடக் கோரி முழக்கமிட்டனர்.

ஏற்கெனவே அமலில் இருந்துவரும் மகாத்மா காந்தி ஊரகவேலை உறுதிச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்கிட வேண்டும், ஆபத்தான திருத்தங்களோடு கொண்டுவரப்பட்ட வி.பி.ஜி ராம்ஜி சட்டத்தை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 150- கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.