திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சிங்கிளாந்தி கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் பாலடைந்து பயன்பாடற்று நிலையில் உள்ள கட்டிடத்தை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் உள்ளன இதில் 12 வார்டுகளுக்கு ஒரு கிராம நிர்வாக அலுவலரும் சிங்கிளாந்தி பகுதிக்கு ஒரு கிராம நிர்வாக அலுவலருமாக இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களுக்கு பணிகள் செய்து வருகின்றனர். இதில் சிங்களாந்தை கிராம நிர்வாக அலுவலரபணியாற்ற்ற ஏதுவாக திருத்துறைப்பூண்டி கலப்பால் சாலையில் ஆட்டுர் சாலையில் பல வருடங்களுக்கு முன்னா கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பயன் பெற்று வந்தனர்.
இப்பொழுது அந்த கட்டிடம் பழுதடைந்து செடிகள் முளைத்து இடிந்து தலையில் விழும் சூழலில் பாழடைந்து கிடக்கிறது. இதனால் அந்த அலுவலகத்தை பூட்டிவிட்டு வேறு பகுதியில் சிங்கிளாந்தி கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சிங்கிளாந்தி கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.