தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஜார் வளர்ந்து வரும் மூன்றாவது வணிக நகரமாக உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏரல் பஜாருக்கு வந்து செல்கின்றனர் இந்நிலையில் பண்டாரவிளையைச் சேர்ந்த விசித்திரா, பொன் செல்வன் என்ற அக்கா தம்பி இருவரும் ஏரல் பஜாருக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர். அப்போது அங்கே கீழே கிடந்த ஒரு மணி பர்சை எடுத்துப் பார்த்து உள்ளனர் அதில் ஒன்றரை கிராம் மோதிரம் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் ஆயிரம் மதிப்புள்ள நகை இருந்தது கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் ஏரல் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி அவர்கள் உடனடியாக ஏரல் பஜாரில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் ஏரல் காஜா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் சாதிக் அலி தவறவிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சாதிக் அலியிடம் மோதிரங்களை ஒப்படைக்கப்பட்டது. மேலும், பண்டாரவிளையைச் சேர்ந்த விசித்திரா, பொன் செல்வன் நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவல்துறையினர் இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினர்.